BREAKING NEWS

அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செங்கோட்டையில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர், கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

 

 

நாடு முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்நாள் விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படு வருகிறது.

 

இதே போல பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் செங்கோட்டை காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

 

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் அதிமுகவினர்கள் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

 

இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், ராமச்சந்திரன், அவைத்தலைவா் தங்கவேலு, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கந்தசாமிபாண்டியன், மண்டலச்செயலாளா் ராமையா, நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், 

மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணை செயலாளா் ஜாகீர்உசேன், நகர எம்ஜிஆர்மன்ற நிர்வாகி சக்திவேல், நகர்மன்ற உறுப்பினா்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் , மற்றும் நகர, ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )