BREAKING NEWS

தொழிலாளர் சங்கம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்குழு கூட்டம் தோழர்.ஆர்.எஸ்.பாலு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

தொழிலாளர் சங்கம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்குழு கூட்டம் தோழர்.ஆர்.எஸ்.பாலு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

செப்டம்பர் 30-ல், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் விவசாயிகளின் விடிவெள்ளி பி.சீனிவாசராவ் நினைவு தின பொதுக்கூட்டம் விவசாய,விவசாய தொழிலாளர் சங்கங்களின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு:

 

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்குழு கூட்டம் தோழர்.ஆர்.எஸ்.பாலு தலைமையில் கும்பகோணம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

 

 

கூட்டத்தில் வி.ச.மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன்,வி.தொ.ச.மாவட்ட செயலாளர் இரா.இராமச்சந்திரன்,சங்க நிர்வாகிகள் ஆர்.செந்தில்குமார்,ஏ.ராஜேந்திரன்,ஏ.எம்.ராமலிங்கம் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் விவசாயிகள்,விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய மக்கள் தலைவர் பி.சீனிவாசராவின் நினைவு தினமான செப்டம்பர் 30 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது,

 

மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அக்டோபர் 10 அன்று நடைபெறும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் 7 ஒன்றிய தலை நகரங்களிலும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )