திண்டுக்கல் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் பாழாகும் விவசாய நிலங்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது .
இந்த நிலங்களுக்கு ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து தாமரை குளம் கண்மாய் மூலம் விவசாயிகள் விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள் .
தற்போது ஒற்றை ஆலமரம் என்னும் இடத்திலிருந்து தாமரை குளத்திற்குசெல்ல நீர்வழிப் பாதை சிமெண்ட் காங்கிரட்டால் கட்டப்பட்டு நிலையில சில பகுதிகளில் காங்கிரட் கட்டாமல் விட்டுவிட்டதால் விவசாய நிலத்திற்குள் தண்ணீர் புகுந்து செல்வதால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு எந்த விவசாயமும் செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி விவசாயிகள் மிகவும் வேதனைக்கு உள்ளாகிறார்கள்.

இது பற்றி பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கா பட்சத்தில் விவசாயிகள் அனைவரும் தாங்கள் போராட்டத்தில் ஈடுபடப்பொவதாக கூறினார்கள்.
