BREAKING NEWS

தஞ்சாவூர் அருகே தள்ளுபடிக்கான கடிதம் வந்த நிலையிலும், நகையை வங்கி அலுவலர்கள் திரும்பி வழங்காமல் ஒரண்டாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல்.

தஞ்சாவூர் அருகே தள்ளுபடிக்கான கடிதம் வந்த நிலையிலும், நகையை வங்கி அலுவலர்கள் திரும்பி வழங்காமல் ஒரண்டாக இழுத்தடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல்.

பட்டுக்கோட்டை அருகே அலிவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், முதல்வர் ஸ்டாலின் நகை கடன் தள்ளுபடி அறிவித்த நிலையில், குறிச்சி, பாலத்தளி, அலிவலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 30 பேருக்கு தள்ளுபடிக்கான கடிதம் வந்த நிலையிலும், நகையை வங்கி அலுவலர்கள் திரும்பி வழங்காமல் ஒரண்டாக இழுத்தடித்து வந்துள்ளனர்.

 

 

 

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்தனர். அதன் பிறகு அதிகாரிகள் உடனே நகைகளை வழங்குவதாக உத்தரவாதம் அளித்தனர்.

 

ஆனால், தற்போது ஒன்பது மாதங்களாகியும் இதுவரை நகையை தாராமல் தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளை அலைகழித்துக்கொண்டு இருப்பதாக குற்றம்சாட்டி நேற்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

ஆனால் எந்த அதிகாரியும் விவசாயிகளை சமதானம் செய்ய வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்த போது, அவரை சந்தித்து முறையிட்டனர்.

 

அவர் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்துச்சென்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )