தாராபுரத்தில், வீட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு..

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் அடுத்த கொண்டரசம் பாளையம் லட்சுமி நகரில் குடியிருந்து வருபவர் கதிர்வேல் வயது 49 இவர் கொங்கூர் பஞ்சாய்த்து அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார்.
இவரது மனைவி வள்ளிநாயகம் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான வெள்ள கவுண்ட வலசுக்கு கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நே ற்று மாலை வீடு திரும்பினார்.

வீட்டில் பின்புற கிரில் கேட் உடைக்கப்பட்டு வீட்டினுள் சென்ற திருடர்கள் பீரோ மற்றும் அங்கிருந்த அலமாரிகளை கலைத்து பீரோவில் இருந்த 35 பவுன் நகை இரண்டு வெள்ளி கொலுசு பணம் 85 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.
நேற்று மாலை வீட்டிற்கு வந்த கதிர்வேலு கிரில் கேட் உடைக்கப்பட்டதை கண்டு தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கூறிவிட்டு,

பின்னர் போலீசுடன் சேர்ந்தே வீட்டுக்குள் சென்றார் நேற்று இரவு 10 மணியளவில் திருப்பூரில் இருந்து வரவழைக்ப்பட்ட மோப்ப நாய்கள் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
