தேனியில் தமிழ் புலிகள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் புலிகள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த மேற்கு மாவட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் தலைமையிலும் தமிழ் புலிகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன்,

மேற்கு மாவட்ட செயலாளர் முகமது ஜின்னா மாவட்ட பொருளாளர் மதுரை வீரன் முன்னிலையிலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை வழங்கினார்கள் இந்த புகார் மனுவில் கூறியதாவது,
உத்தமபாளையம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு எனத் தெரிந்தே இப்பகுதி தலித் மக்களிடம் நிலத்தை பல லட்சம் ரூபாய்க்கு விற்று உள்ள உத்தமபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் சந்திரசேகர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சர்வே எண் 1954/1 இல் 153 பட்டாவை ரத்து ரத்து செய்யக் கோரியும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை வழங்கினர்.

இந்த புகார் மனு வழங்கும் நிகழில் 20க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
