BREAKING NEWS

பழனியில் ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பழனியில் ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராயல் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் சிஎஸ்ஐ வேக்மேன் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 

 

இந்நிகழ்வில் சித்த மருத்துவர் மகேந்திரன் கலந்துகொண்டு ராயல் சிட்டி லைன்ஸ் கிளப் சார்பில் மஞ்சள்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இயற்கை மருத்துவம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் லயன்ஸ் கிளப் தலைவர் பிரகாஷ், செயலாளர் ஜெப கனி ராஜா, பொருளாளர் ஜோதி கணேஷ், சங்க நிர்வாகி மனோகரன் ,அமைப்பு உறுப்பினர்கள் முத்து விஜயன் செந்தில்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

முன்னதாக பள்ளி வளாகத்திற்குள் மாணவ மாணவியர்கள் உதவியுடன் 30 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் சிறப்பாக மரக்கன்றுகளை வளர்க்கும் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .

 

தொடர்ந்து பள்ளி குழந்தைகளிடம் பேசிய மகேந்திரன் இயற்கையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

 

மேலும் இயற்க்கையுடன் நாம் எவ்வாறு ஒன்றி வாழ வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்.

 

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ஜெர்சிபாய் பிரிண்ஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )