தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடங்களில் வளர்ந்து வரும் அரசமரம் போன்ற மரங்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பல்வேறு புதிய மருத்துவ சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய அறுவை சிகிச்சை ஆரம்பம் பின்புர கவனிப்பு வார்டு உள்ளிட்டவற்றை தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறந்து வைத்தார்.

அவ்வப்போது மாவட்ட ஆட்சியரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு வரும் நிலையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முகப்பு பகுதியில் அனைவரும் பார்க்கும் முக்கிய இடங்களில் கூட கட்டிடங்களின் மேலே ஆங்காங்கே அரசமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்து கட்டிடங்களின் திறத்தன்மையை சீர்குலைக்கும் வண்ணம் வளர்ந்து வருகிறது.

மேலும் கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் குழாயில் கசிவுகள் ஏற்பட்டு ஆங்காங்கே கழிவு நீர் வெளியாகி வருகின்றன.

இந்த கழிவுநீரும் கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் வடிந்து வருவதால் கட்டிடம் விரைவில் சீர்குளையும் நிலை ஏற்பட்டுள்ளது இது போன்ற சின்னஞ்சிறிய பழுதுகளை உடனே சீர் செய்தால் கட்டிடம் இன்னும் பல வருடங்களுக்கு எவ்வித சேதமும் இன்றி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இது போன்ற சிறிய பழுதுகளை பார்க்காமல் கண்ணுக்குத் தெரிந்த இது போன்ற சீர்கேடுகளை சரி செய்யாமல் மருத்துவ கல்லூரி நிர்வாகம் அலட்சியம் காட்டுவது ஏன் என்று பொதுமக்களிடையே. கேள்வி எழுந்துள்ளது.

எனவே இது போன்ற மரங்கள் வளர்வது, கழிவு நீர் கசிவு ஏற்படுவது போன்ற பழுதுகளை சீர் செய்து கட்டிடத்தை வலு சேர்க்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.
செவி சாய்க்குமா தூத்துக்குடி மருத்துவ கல்லூரி நிர்வாகம்..??
