BREAKING NEWS

தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணி ரூ.155 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணி ரூ.155 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார்.

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது. கண்டியூர் தொடங்கி திருவையாறு வரை சாலை குறுகலாக இருந்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று அந்தபகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

 

இதையடுத்து திருவையாறு அருகே உள்ள அரசூரில் இருந்து விளாங்குடி வரை அரியலூர் சாலையை இணைக்கும் வகையில் புதிய புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

 

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதற்காக ரூ.155 கோடியே 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தஞ்சை கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அலகு சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர் தொடங்கி வைத்தார்.

 

 

இந்த புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா தஞ்சையை அடுத்த திருவையாறு கஸ்தூரிபாய் நகர், திருவையாறு அருகே உள்ள அரசூர் (பெரம்பலூர்- மானாமதுரை சாலை) ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திருவையாறு எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

 

 

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணயமூர்த்தி, டி.கே.நி.நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம்,

 

 

தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வக்குமார், உலகநாதன், முரசொலி, சிவசங்கரன், கவுதமன், முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் துரைஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )