BREAKING NEWS

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் நடந்து வரும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் நடந்து வரும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை பேரூராட்சி அலுவலகத்துக்குநேற்று பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா வந்தார். அவர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார்.

 

தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபுரத்தில் புதிததாக கட்டப்பட்டு வரும் சுகாதார வளாக கட்டுமானப்பணிகளையும், செந்தூர் நகரில் அமைக்கப்படும் பூங்கா பணிகளையும், மலை மீதுள்ள வெட்டுவான் கோவில் சமணர் படுகை உச்சிமலை வரை நடைபெற்றுள்ள சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், பேரூராட்சி தலைவர் அருணாசுப்பிரமணியன், துணை தலைவர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

CATEGORIES
TAGS