BREAKING NEWS

தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.

தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனி பஸ் ஸ்டாப் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம்..

 

மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், தலைமையில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்போது பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 

 

அப்பொழுது முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று அதிமுக வெற்றி பெரும்..  ஒரு வேளை இரட்டை இலை சின்னம் கிடைக்க பெற தாமதமானாலும் அதிமுக தான் வெற்றி பெறும்..

 

அதிமுகவில் பிரச்சினை உருவாகும் போது எல்லாம் இடைத் தேர்தல் திருப்பு முனையாக அமையும் திண்டுக்கல் இடைத் தேர்தல் திருப்பு முனை போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடை த் தேர்தல் திருப்பு முனையாக அமையும்.

 

தமிழகத்தில் தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான்.

 

இடைத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு அதிமுக எந்த அணியும் இருக்காது எல்லாம் ஓர் அணி தான். 1000 எதிரிகளை கூட சமாளித்து விடலாம் ஆனால் ஒரு துரோகியை சமாளிப்பது தர்ம சங்கடம்(( ஒ.பி.எஸ்)) குறித்து விமர்சனம்..

 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பம்பரம் போல் சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டவர் எடப்பாடியார்..அதனால் தான் 75 தொகுதியை கைப்பற்ற முடிந்தது.. 2021 க்கு பிறகு எடுத்த ஒற்றை தலைமை நிலைபாட்டை ஓராண்டுக்கு முன்னரே எடுத்து இருந்தால் நாம் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருப்போம்.

 

 

தை அமாவாசை என்று நன் நாள் பார்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 அமைச்சர்கள் இன்று பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். அமாவாசை செண்டிமெட் எல்லாம் திமுகவிற்கு செட் ஆகாது திமுகவிற்கு இனிமேல் நாள் தோறும் அமாவாசை தான் வெளிச்சமே கிடையாது.

 

பொதுக் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நீலகண்டன்,பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா,ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, நகரத் துணைச் செயலாளர் மாதவராஜ்,

 

நகர பொருளாளர் ஆரோக்கியராஜ், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி,மாவட்ட மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், எட்டைபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,

 

 

மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் பாலகணேசன், ஒன்றிய கவுன்சிலர் ராமர், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,

 

வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன், மகேஷ் பாலா, கனிராஜன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், கழுகுமலை வார்டு செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், மகளிர் அணி ராமலட்சுமி,

 

ஜெயந்தி, பத்மாவதி, தமிழ்ச்செல்வி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, பழனி குமார், பழனி முருகன், முருகன், கோபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

CATEGORIES
TAGS