BREAKING NEWS

பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாலங்காட்டில் நடந்தது.

பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாலங்காட்டில் நடந்தது.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காடு டி.பண்டாரவாடையில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா நடந்தது.

 

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி எம்.பி யின் இந்திய ஒற்றுமை பயணம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கப்பட்டு 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் 3500 கிலோமீட்டர் சென்ற இந்திய ஒற்றுமை பயண வெற்றி விழா நிறைவடைந்ததையொட்டி,

 

மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.ராஜகுமார் எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி கொடியேற்று விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அகமது தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஜம்புகென்னடி முன்னிலை வகித்தார்.

 

குத்தாலம் காங்கிரஸ் கமிட்டி நகர செயலாளர் பூர்விகாசெந்தில் வரவேற்றார்.இதில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி டி.ஆர் தங்கராசு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

 

அப்போது திமுக ஊராட்சி செயலாளர் வெடிபாண்டியன், திமுக ஒன்றிய பிரதிநிதி வெடிபாலமுருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஹபீப், ரமேஷ், மரிய ஆரோக்கியராஜ், கமலக்கண்ணன், பார்த்தசாரதி.அலி.ரமேஷ், இளைஞரணி ரிபாய்தீன், குமார், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS