BREAKING NEWS

கே வி குப்பம் அருகே மனநலம் பாதித்த 16 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.

கே வி குப்பம் அருகே மனநலம் பாதித்த 16 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பெருமாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (48). இவர் காங்குப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேண்டாலட்சுமி அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், இவர்களது இரண்டாவது மகள் தனுஜா (16) பிறவியிலிருந்தே மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மன நலம் பாதித்த மகளின் நிலையை நினைத்து பாபு மிகவும் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று
மனநலம் பாதித்த மகளை, தந்தையே ( பாபு ) கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கழிவறையில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

வீட்டில் சடலமாக இருந்த சிறுமி மற்றும் பாபுவை பார்த்த உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர் உடனடியாக அருகில் உள்ள கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்த கே.வி குப்பம் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த துயர சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தந்தையே மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

CATEGORIES
TAGS