கோயம்புத்தூரில் மனைவியை கொலை செய்த டெய்லர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்டர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த மதுரை வீரன் வயது 37. இவர் சின்ன வீரம்மாள் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது திருமணம் கோயம்புத்தூரில் சின்ன தடாகத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 மாதமாக ஒன்றாக சின்ன தடாகத்தில் தனியாக 2 பேரும் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், மதுரை வீரனுக்கு வாய் தகறார் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த மதுரை வீரன் சித்ராவை கழுத்த நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி நிலக்கோட்டை ஓடி வந்து விட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மேஜிஸ்ட்ரேட் நல்லகண்ணன் முன்னிலையில் சரணடைந்தார். இது குறித்து சம்பந்தப்படட போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் 15 நாள் சிறைக் காவலில் வைக்க மேஜிஸ்டர் நல்ல கண்ணன் உத்தரவிட்டார். தனது 2 வது மனைவியை கொலை செய்துவிட்டு மூன்று நாட்களுக்கு பின்பு நிலக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர். ம.ராஜா