BREAKING NEWS

செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.

செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணாசிலையருகே பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அங்கம் பசுமை தாயகம் சார்பாக கால வெப்ப நிலை கருதி நடவடிக்கை மேற்கொள்ள வலியுருத்தி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது.

பசுமை தாயக பெரம்பலூர் மாவட்ட செயலாளர், நம்மங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் காட்டுராஜா தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட பசுமைதாயக மாநில துணை செயலாளர் கோ.இராஜேஸ்வரன், பசுமை தாயக மாநிலசெயற்குழு உறுப்பினர், செந்துறை ஒன்றிய குழு உறுப்பினர் பி.பெ.செல்வகடுங்கோ, இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆ.தேவிலால் ஆகியோர் முன்னிலையில்.

காலநிலை நடவடிக்கை கோரி கையெழுத்து இயக்கத்தை பா.ம.க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உலக.சாமிதுரை துவக்கி வைத்து பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் உலக வெப்பமயமாதலை தடுக்கவும் இயற்கையை காத்திட அதிக அளவில் மரங்களை வளர்த்திட வேண்டுமென கூறினார்.

 

இந்நிகழ்சியில் ஒன்றிய செயலாளர்கள் கா.காமராஜ் , பி.ஆர்.ராஜா, ஆர்.செல்வகுமார், மற்றும் சகுந்தலாதேவி, குழுமூர்ஆனந்த்,செல்வம், சுகுமார், மும்மூர்த்தி,விக்னேஷ், ராஜ்குமார்,சந்திரசேகர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்
தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நன்றியுரை பசுமைதாயக மாவட்ட தலைவர் நாக.செந்தில் கூறினார். இந்நிகழ்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு காலநிலை நடவடிக்கை கையெழுத்து இட்டனர்.

செய்தியாளர் வினோத்குமார்.

Share this…

CATEGORIES
TAGS