BREAKING NEWS

தேனியில் காமராஜர் 121 வது பிறந்த விழா கொண்டாட்டம்

தேனியில் காமராஜர் 121 வது பிறந்த விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் விதமாக தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் தேனி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மற்றும் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது.

 

இந்த ரத்ததான முகாமினை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியினை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் வெண்கல திருவருவ சிலைக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

CATEGORIES
TAGS