BREAKING NEWS

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த மண்நாயக்கன்பாளையத்தைச்
சேர்ந்த சமூக விரோதி விஜயகுமார்.

இவர் தன்னுடன் சில சமூக விரோதிகளை கூட்டணி அமைத்துக் கொண்டு மண் கடத்தல், மணல் கடத்தல், கிராவல் கடத்தல், ப்ளூ மெட்டல் கடத்தல் மற்றும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தல் என பல அரசால் தடை செய்யப்பட்ட தொழிலை நடத்தி வருகிறார்.

இந்தத் தொழிலுக்கு இடையூறு எதுவும் வராமல் இருப்பதற்கு கண்ணமங்கலம் காக்கிகளுக்கு தலை முதல் வால் வரை மாமூல் கொடுத்து தனது விருப்பம் போல் தொழிலை விரிவு படுத்தி ஏக போக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் இந்த விஜயகுமார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.

அத்துடன் விஜயகுமாருக்கு கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் சில கட்டப்பஞ்சாயத்துதாரர்கள்  இவருக்கு வால் பிடிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

காவல் நிலையத்தில் இவருக்கு ஏதாவது பிரச்சனை என்று அழைப்பு வந்தால் உடனடியாக விஜயகுமாருக்காக சிபாரிசு செய்ய  கட்சி பிரமுகர்கள் வந்துவிடுவதாக கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி கதை கதையாக கூறுகிறார்.

நிலைமை இப்படியே மோசமாக சென்று கொண்டிருக்க கந்து வட்டிக்கு பணம் வாங்கியவர்களை விஜயகுமார் மற்றும் சில சமூக விரோதிகள் கும்பலாகச் சென்று அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி பணம் பறிப்பதாக பல புகார்கள் காவல்துறைக்கு வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் சில காக்கிகள் இவரிடம் மாமூல் வாங்குவதால் இவருக்கு வாலாட்டிக் கொண்டிருந்தனரே தவிர நன்றி மறவாமல் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இதனால் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு வாழ்க்கையின் எல்லைக்கு, வாழ்க்கையின் ஓரத்திற்குச் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்த தகவல் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரின் கவனத்திற்குச் சென்றது. ஆனால் அவரும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அமைதி காத்து வந்தார்.

இந்நிலையில் பொருத்துப் பார்த்த கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினர் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்குக்கு புகார் மனுவை அனுப்பினர்.

இந்த புகார் மனுவின் மீது ரகசிய விசாரணை நடத்திய அஸ்ரா கார்க் அந்த புகார் மனு உண்மையானது என்று தெரிந்து கொண்டு அந்த கந்துவட்டி விட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் மற்றும் அவர்களது உயிருக்கு ஆபத்து விளைவித்து வந்த விஜயகுமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவு கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமியின் கவனத்திற்கும் சென்றது. ஆனால் மகாலட்சுமி விஜயகுமாரிடம் மாமூல் வாங்குவதால் வாலாட்டிக் கொண்டு நன்றி மறக்காமல் அதையும் பணமாக்கி ரூபாய் 12 லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டு விஜயகுமாரை கைது செய்யாமல் விட்டுவிட்டார் என்று ஒரு தகவல் கண்ணமங்கலம் பகுதியில் காட்டுத்தீ போல பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாகவும், பரவலாகவும் பேசப்பட்டு, பேசு பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி காவல்துறையில் நடக்கும் சங்கதிகள் பொதுமக்களின் காதுகளுக்கும், அவர்களது கவனத்திற்கும் சென்ற வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் சொன்ன உத்தரவை மதித்து பின்பற்றி நடக்காமல் அதை காற்றிலே பறக்க விட்டு விட்டு தங்களது கல்லாவை நிரப்பிக் கொண்டனர் கண்ணமங்கலம் காவல்துறையினர் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆக மொத்தத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை காவல்துறை காப்பாற்றுமா? அல்லது கைகழுவி விட்டுவிட்டு அவர்கள் படும் வேதனையை வேடிக்கை பார்க்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS