BREAKING NEWS

புதிய நீதி கட்சி சார்பில் குடியாத்தத்தில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா!

புதிய நீதி கட்சி சார்பில் குடியாத்தத்தில் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா!

தமிழக முன்னாள் முதலமைச்சர், தென்னாட்டு காந்தி, பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு,

புதிய நீதி கட்சியின் நிறுவனர், தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகம் ஆணைக்கிணங்க, கட்சியின் செயல் தலைவர் ஏ. ரவிக்குமாரின் வழிகாட்டுதலின்படி,

குடியாத்தம் கே. வி. குப்பம் தொகுதி, ஒன்றிய அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பாக மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில தொண்டர் அணி செயலாளர் பட்டு வி.பாபு, மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் டி. பிரவீன் குமார், ஒன்றிய செயலாளர் ராம.இளங்கோவன், அம்பேத்கர் பேரவை மண்டல செயலாளர் நத்தம் ஆர். நாகராஜ், மாவட்டத் தலைவர் ஆர். இளஞ்செழியன், அம்பேத்கர் பேரவை மாவட்ட செயலாளர் நத்தம் ஆர்.விக்னேஷ்,சங்கர், ராஜா மற்றும் நிர்வாகிகள் தினேஷ், விஜய், படையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை புதிய நீதி கட்சி

வேலூர் புறநகர் மாவட்டத்தினர் விமரிசையாக செய்திருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS