BREAKING NEWS

“DMK Files மூலம் அண்ணாமலை கோடி கோடியாக சம்பாதித்தார்” – பாஜக செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் அதிரடி குற்றச்சாட்டு

“DMK Files மூலம் அண்ணாமலை கோடி கோடியாக சம்பாதித்தார்” – பாஜக செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் அதிரடி குற்றச்சாட்டு

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண், கொலை மிரட்டல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோவிலம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டெய்சி சரண், அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்தும், கட்சிக்குள் தனக்கு நேர்ந்த துயரங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்.

திருச்சியில் நடைபெற்ற சிறுபான்மையினர் மாநில செயற்குழு கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில், அண்ணாமலையின் புகைப்படம் சிறியதாக இருந்ததாகக் கூறி திருச்சி சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக என்னை மிகவும் ஆபாசமாகவும், மோசமாகவும் பேசி திருச்சி சூர்யா ஆடியோ அண்ணாமலைக்கு அனுப்பி இருந்தேன். இதனால் நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்

இந்த ஆடியோ ஆதாரத்தை கட்சியின் தலைமையகத்திற்கும், அப்போதைய தலைவர் அண்ணாமலை, கரு. நாகராஜன் மற்றும் தற்போதைய அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோருக்கும் அனுப்பி வைத்தேன். இதன் பிறகு, அண்ணாமலை எங்களை நேரில் அழைத்து பேசினார். ஆனால், தவறு செய்த திருச்சி சூர்யாவைக் கண்டிப்பதற்குப் பதிலாக, அண்ணாமலை அவரைப் புகழ்ந்து பேசினார். இதைக் கண்டு நான் நிலைகுலைந்து போனேன்.”

மேலும், இந்த ஆடியோ விவகாரம் ஊடகங்களில் வெளியாகிப் பரவியபோது, அண்ணாமலை தன்னை நேரில் அழைத்து மிரட்டியதாக டெய்சி சரண் குற்றம் சாட்டினார். அப்போது அண்ணாமலை தன்னை கடுமையாகத் திட்டியதால் தான் அழுதுவிட்டதாகவும், ஆடியோ வெளியானதால் தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு அண்ணாமலை கட்டாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். கட்சிக்குள் இருந்துகொண்டே அண்ணாமலை தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக சக கட்சி நிர்வாகிகளே குற்றம் சாட்டியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சொந்தக் கட்சிணருக்கு எதிராக வீடியோ ஆதாரங்களை சேகரித்து அவர்களை மிரட்டுவார் அண்ணாமலை

திமுக பிரமுகர்களின் எதிரான பட்டியலை ‘DMK Files’ என்ற பெயரில் வெளியிட்டதன் மூலமாக, அண்ணாமலை அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளார்.

மேலும் ஆவணங்களை வெளியிடாமல் இருக்க பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்

பெரிய பெரிய தொழிலதிபர்களைத் தனது பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் சென்று பேசி, அண்ணாமலை தனது சொந்த வேலைகளையும், நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொண்டார்.

திருச்சி சூர்யா தன்னைவிட பெரிய ஆள் ஆகிடுவார் என அச்சத்தில் அவரை பழி வாங்கும் நோக்கத்தில் தான் அனிஷா அப்துல்லாவுடன் பேச விட்டு அந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார்

சொந்த பிள்ளை போல பாதுகாத்த பிஜேபியை தற்போது அவர் நிராகரித்து சென்றுள்ளார்

CATEGORIES
TAGS