முதல் தகவல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பா? குற்றவாளியை பொத்தி பொத்தி பாதுகாக்கும் காட்பாடி போலீஸார்!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் கடந்த 25/8/2026 அன்று காட்பாடியில் சித்தூர் கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அனுசுயா அறுசுவை விருந்து ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் பிரியாணி உணவு சாப்பிட வந்த பழைய காட்.பாடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முனுசாமி என்ற வாடிக்கையாளரை ஆபாச வார்த்தைகளை கூறி திட்டி அவமரியாதையாகவும் ,காவல் துறையையும், நீதி துறையையும் அவமதிக்கும் விதமாக பேசினார் அந்த ஓட்டல் நிர்வாகி. இந்நிலையில் அந்த ஓட்டல் நிர்வாகி மீது காட்பாடி போலீஸார் FIR பதிவு செய்தனர். இந்நிலையில் அவரை அழைத்து விசாரணை செய்யாமல் அவரிடம் “ப” வைட்டமின் பெற்றுக்கொண்டு விசாரணையை முடித்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் முனுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதியை தேடி காவல்துறையிடம் சென்று முறைப்படி புகார் அளித்தால் காவல் துறையோ குற்றவாளியாக கூறப்படும் நபரிடம் நிதியை பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காமல் செய்துள்ளதாக காட்பாடி போலீஸார் மீது புகார்தாரரான முனுசாமி தெரிவிக்கின்றார்.
மேலும் இந்த புகார் குறித்து மாவட்ட நிர்வாகமும், நீதித்துறையும் இணைந்து தகுந்த சட்டநடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யுமாறு முனுசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதே கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோளாக விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபரை காண்பித்து காட்பாடி போலீசார் அனுசுயா ஹோட்டல் நிர்வாகத்திடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியாக யாரை புகார்தாரர் கள் குறிப்பிடுகிறார்களோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டிய காவல்துறையினர் இடையில் தேவையில்லாத வேலைகளை பார்த்து பாதிக்கப்படுபவர்கள் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலச் செய்து மேலும் நோகடிக்கச் செய்கின்றனர். இது போன்ற விசாரணை செய்யாத காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் துறையானது ஆயுதப்படைக்கு அனுப்பி அவர்களுக்கு நல்ல பயிற்சியும், புத்தாக்க பயிற்சியும் அவர்களுக்கு சட்டம் தொடர்பாக மீண்டும் வகுப்பும் எடுக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு காவல் நிலையத்தை எடுத்துக் கொண்டால் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக வருகை தந்து தங்களது புகார்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்களிடம் கொடுக்கின்றனர்.

இந்த புகார்களை உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் விசாரணை நடத்துகின்றனர். ஆனால் ஏனோதானோ என்று காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது, பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் கூறும் புகாரை காது கொடுத்து கேட்பதில்லை.

அவர்கள் விருப்பத்திற்கு அவர்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அவ்வாறு நடவடிக்கை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் காவல் அதிகாரிகள். ஆதலால் உரிய முறையில் விசாரணை நடத்தி அது உண்மையா என தெரியும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வகையில் காவல்துறை உதவ முன் வர வேண்டும். கருணையின் நிறம் காக்கி என்று பெயரளவில் தான் சொல்கின்றனர். ஆனால் அதே போன்று காவல்துறை உங்கள் நண்பன் என்றும் சொல்லுகின்றனர். காவல்துறை பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பனாக இருப்பதில்லை. காவல்துறை அலுவலர்கள் நியாயமாக செயல்படாமல் அதை விடுத்து குற்றவாளிகள் தரப்பிற்கு உறுதுணையாக செயல்படுவது, அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு புகார்தாரை அலைகழிப்பது என்பது அன்றாட நிகழ்வாக உள்ளது. இதை பலரும் நன்கு விஷயம் அறிந்தவர்கள் கூட மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்வதில்லை. இதை ஏதோ ஒருவர்தான் கொண்டு செல்கிறார். இவ்வாறு நிலைமை மிகவும் மோசமாக போய்க் கொண்டுள்ளது. காவல்துறை புரையோடி போவதற்குள் அதற்கு வைத்தியம் பார்க்க காவல்துறையை கையில் வைத்து கொண்டுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன் வரவேண்டும். காவல்துறை தலைவரும் இதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் ஒட்டுமொத்தமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேல் பாதிக்கப்பட்டவருக்கு காட்பாடி காவல் நிலையத்தில் என்ன உதவி செய்கிறார்கள்? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
