தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி, 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு.

தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் தஞ்சை மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.
சப்ஜூனியர், ஜூனியர் , யூத், சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டி நடைபெற்றது, இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், 30 நடுவர்கள் மற்றும் 25 சிலம்பப் பள்ளிகள் ஆகியவை கலந்து கொண்டன.

இப்போட்டியில் தஞ்சை கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து சிலம்ப போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவர், இந்நிகழ்ச்சியில் சிலம்பாட்டக் கழக நிர்வாகிகள், சிலம்ப வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS கல்விதஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம்தஞ்சாவூர் மாவட்டம்தஞ்சை மாவட்ட சிலம்பாட்ட கழகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்
