BREAKING NEWS

தேனியில் AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனியில் AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.

 

தேனி மாவட்டம் பாளையத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி AICCTU சார்பாக உத்தம பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

 

இன்று உத்தமபாளையத்தில் AICCTU ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் K.இளையராஜா தலைமை தாங்கினார். தோழர்.ஆரோக்கியராஜ், தோழர்.முஹம்மது பாசில், தோழர்.அழகிய மணவாளன் முன்னிலை வகித்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தை விளக்கி, நீதிக்கான மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர் தோழர். முனைவர் பொன். சுப.பாண்டிக்குமார், புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.எஸ்.எம்.உதுமான் அலி ஆகியோர் உரையாற்றினர்.

 

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல்,டீசல் மீதான விலை உயர்வை கட்டுப்படுத்திடவும், வரிகளைக் குறைத்திட வலியுறுத்தியும்,

 

ஆட்டோ தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் குடும்ப பாதுகாப்பிற்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களை தரைக்குறைவாக பேசும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இதுபோன்ற பல்வேறு கோரிக்கை அம்சங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

நிகழ்வில் மத்திய,மாநில அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், சிவக்குமார் மற்றும் திரளான ஆட்டோ தொழிற்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )