காட்பாடி மிஷன் காம்பவுண்ட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா காணாமல் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ள பேருந்து நிறுத்தம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வள்ளிமலை மெயின் ரோட்டில் காட்பாடி மிஷன் காம்பவுண்டில் பேருந்து நிறுத்தம் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டது. இதை கடந்த திமுக ஆட்சி காலத்தில் காட்பாடி தொகுதி எம்எல்ஏவும் ,திமுக பொதுச் செயலாளர், நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் காலத்தில் கட்டி முடித்தனர்.

ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் முறையான இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. அடிப்படையில் இருக்கை ஞஞ்வசதிகள் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்டவற்றை எதையும் பொருத்தாமல் பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டு விடப்பட்டது. இதனால் இந்த மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சமூகவிரோதிகள் இரவு நேரங்களில் அமர்ந்து போதை பொருட்களை உட்கொள்வது, மதுபானங்கள் அருந்துவது, விபச்சாரத்தில் ஈடுபடுவது என பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த இடம் குறிப்பாக இருட்டாக காணப்படுவதால் இவ்வாறு சமூக விரோதச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதை யாரும் கண்டு கொள்ள முன்வரவில்லை. தற்போது காட்பாடி தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் சுதாகர் இதை கண்டு கொள்ளாமல் அலட்சியப் போக்கில் விட்டு விட்டார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காட்பாடி தொகுதியில் கட்டப்பட்டு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு திறப்பு விழா காணாமல் அமைதியாக போடப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் மிஷன் காம்பவுண்ட் பேருந்து நிறுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க பேருந்து நடத்துனர்கள் முன் வருவதில்லை. இதற்கு மாறாக ஆண்களை மற்றும் சற்று தூரத்தில் சென்று பேருந்தை நிறுத்தி அவர்களை இறக்கி விடுவது ஏற்றிக் கொள்வது என பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஒரு புதிய நடைமுறையைன
பின்பற்றி அதை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டனர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக மாறிக் கொண்டுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டால் அதை உடனடியாக தொகுதி எம்எல்ஏ திறந்து வைப்பது வழக்கம் ஆனால் இந்த பேருந்து நிறுத்தம் மட்டும் கட்டப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே திறப்பு விழா காணாமல் கிடக்கின்றது இதனால் தாவேக எம்எல்ஏ பல சொல்லனு துயரங்களை அனுபவிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது குறிப்பாக ஒரு வீடு என்பது கட்டப்பட்டால் என்பது அல்லது 90 நாட்களில் முடிக்கப்பட வேண்டும் ஆனால் இந்த நிழல் கூடை எனப்படும் பேருந்து நிறுத்தம் திறப்பு விழா காணாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மிஷன் காம்பவுண்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தை வடக்கு பகுதி செயலாளர் ஆக உள்ள வன்னிய ராஜா கட்டி முடிக்க டெண்டர் எடுத்தார். ஆனால் ஒப்பந்ததாரர் ஆன வன்னியராஜா கட்டி முடிக்காமல் அவரது உறவினர் மகனான இளைஞர் அணியை சேர்ந்த கமல் என்பவருக்கு பணியை ஒதுக்கீடு செய்து தந்தார் வன்னியராஜா .இதில் டெண்டர் எடுத்த கமல் என்பவர் பணியை முழுமையாக முடிக்காமல் அரைகுறையாக விட்டு விட்டு சென்றுவிட்டார். இதனால் இந்த பேருந்து நிலையம் மிகவும் மோசமான நிலையில் மாறிக்கொண்டு உள்ளது. பகலில் ஒரு இரவு இந்த பகுதியில் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. இரவு முழுவதும் இருட்டாக இருப்பதால் இங்கு விரும்ப தகாத வேலைகள் பல நடக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது .இவ்வாறு சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வரும் இந்த மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்கூடத்தை முழுமையாக வடிவமைத்து அதில் மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை தேவையான இடங்களில் பொருத்தி முறையாக அந்த கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று இந்த பகுதி வாழ் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்த பேருந்து நிறுத்தத்தை திறந்து வைப்பாரா ?அல்லது அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு சென்றது போல் விட்டு விட்டு நிரந்தரமாக சென்று விடுவாரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதனை உடனடியாக காட்பாடி ஒன்னாவது மண்டல குழு தலைவி புஷ்பலதா ஆய்வு செய்து பணியை முடித்து தர ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடுவாரா? அல்லது மாநகராட்சி ஆணையர் உத்தரவிடுவாரா என்று தெரியவில்லை .மாவட்ட நிர்வாகமும் இது போன்ற அரைகுறை பணிகளை விட்டுச் சென்ற ஒப்பந்ததாரர்களை கண்டறிந்து அவர்களை பணியை முழுவதுமாக முடித்து தர உத்தரவிட வைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்த பகுதியில் நடைபெறும் சமூக விரோதச் செயல்கள் அடியோடு நிறுத்தப்படுமா? அல்லது தொடர்ந்து நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்.
