சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில்களில் திருவிழாயொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில் திருவிழாயொட்டி, காப்பு கட்டுதல் விநாயகர் சாமிக்கு பொங்கல் வைத்தல், பூஞ்சோலையில் இருந்து கரகம் ஜோடித்து மேளதாளம் , வானவேடிக்கையுடன் அம்மன் கோவில் வந்தடைதல் நடந்தது .
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காளியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர்.
மேலும் அம்மன் சன்னதியில் இருந்து ஆட்டம் பாட்டம், மேளதாளம் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க கரகம் மற்றும் முளைப்பாரியுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைதல் நிகழ்ச்சி நடந்தது .
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பெத்தியகவுண்டன் பட்டி உழவர்குடி, பழநிமாநகர் பொதுமக்கள் செய்திருந்தனர் .
CATEGORIES திண்டுக்கல்
