தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் முடிவு: தலைவராக வி.ஆர். கார்த்திக் தேர்வு

திருச்சி மாவட்டம் தொட்டியம் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான 2026-2027-ஆம் ஆண்டு நிர்வாகக் குழுத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் புதிய தலைவராக வி.ஆர். கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக பெரிய. பார்த்திபன் மற்றும் மகளிருக்கான துணைத் தலைவராக ஜி. துர்காதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் செயலாளராக ஏ. அண்ணாதுரை பொறுப்பேற்றார். இணைச் செயலாளராக ஜி. பிரசாந்த் மற்றும் மகளிருக்கான இணைச் செயலாளராக எம். நதியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் பொருளாளராக ஏ. முருகானந்தம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தல் அலுவலர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த புதிய நிர்வாகிகளுக்கு, தொட்டியம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
