BREAKING NEWS

பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா திருத்தேரோட்டம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா திருத்தேரோட்டம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள பண்பொழி, திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் வருடம்தோறும் தைப்பூசத் திருவிழாவானது 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வருடத்திற்கான தைப்பூசத் திருவிழாவானது கடந்த 23-ஆம் தேதி 100 அடி உயரமுள்ள அன்னக்கொடி ஏற்றப்பட்டு வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து கடந்த 29-ஆம் தேதி அன்று முருகர்-சண்முகர் எதிர்சேவை காட்சி வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் திருத்தேரோட்டம் நிகழ்வானது நடைபெற்றது.

பண்பொழி பகுதியில் நடைபெற்ற இந்தத் திருத்தேரோட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் முழுங்க முன்பாக பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்த நிலையில், வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த தேரோட்டம் நிகழ்வினை முன்னிட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளும்செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS