BREAKING NEWS

எடப்பாடியில் காரை பின்னோக்கி 16 கிலோமீட்டர் ஓட்டி சென்று சாதனை.

எடப்பாடியில் காரை பின்னோக்கி 16 கிலோமீட்டர் ஓட்டி சென்று சாதனை.

கேரள இளைஞரின் சாதனையை முறியடித்த இளைஞர்..!

சேலம் மாவட்டம், எடப்பாடியில் காரை பின்னோக்கி 16 கிலோமீட்டர் ஓட்டி சென்று சாதனை..!!!

 

எடப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட ஜலகண்டாபுரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த நெசவுத்தொழிலாயான பூபதி, இவரது மகன் சந்திரமவுளி 35 சிறு வயதிலிருந்தே கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

 

இதனை தொடர்ந்து, எடப்பாடி புறவழிச்சாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில், 16 கிலோமீட்டர் 140 மீட்டர் தூரத்தினை 29 நிமிடம் 10 வினாடிகளில் சந்திரமௌலி தனது காரை அங்கீகரிக்கப்பட்ட நடுவர் வழக்கறிஞர் குமார் முன்னிலையில், பின்னோக்கி ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

 

 

ஏற்கனவே கேரள மாநிலம், பந்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த டேசன் தாமஸ் என்பவர் 30 நிமிடங்களில் 14 கிலோமீட்டர் தூரத்தினை காரில் பின்னோக்கி ஓட்டிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

 

அதன் ஒரு பகுதியாக, சாதனை புரிந்த இளைஞர் சந்திர மௌலியை திமுக மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி எடப்பாடி நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம் பாஷா, நங்கவள்ளி திமுக ஒன்றிய செயலாளர் சின்னு(எ) அர்த்தனாரீஸ்வரன், அவைத் தலைவர் ராஜு, சேட்டு, எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்ட திரளானோர் வாழ்த்தி, பாராட்டினர். அதனை அடுத்து, இளைஞர் சந்திர மௌலி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

 

சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தி இந்த சாதனையை நிகழ்வை மேற்கொண்டதாகவும், இளைஞர்கள் சாலைகள் மற்றும் பொதுவெளிகளில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை கொண்டு சாகச நிகழ்வுகளில் ஈடுபட கூடாது எனவும், கட்டாயம் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும்,

 

இந்த சாதனை நிகழ்வின் மூலம் கேட்டுக் கொள்வதாக கூறினார். சாதனை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஜலகண்டாபுரம் ஓம் முருகா நண்பர்கள் குழுவினர் மற்றும் ஐயப்பா சேவா சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )