எடப்பாடி அருகே உள்ள பேக்கரியில் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து வாடிக்கையாளர்கள் சிதறி ஓட்டம்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள வெள்ளாண்டுவலசு பகுதியில் வேலுச்சாமி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பேக்கரிக்கு தேவையான ஸ்வீட் காரம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரித்து கொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து, பேக்கரியில் இருந்த வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் சிதறி அடித்து பேக்கரியை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்க்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும், பேக்கரியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது இதுகுறித்து எடப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
