தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் கூட்டம் நடந்தது.

இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 3.5 % இடஒதுக்கீட்டை 7 % ஆக உயர்த்த வேண்டும்: செங்கோட்டையில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு மாநிலச்செயலாளர் செய்யது அலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் அப்துல்பாசித் , மாவட்டத் துணைத் தலைவர் செய்யது மசூது, மாவட்ட துணைச்செயலாளர்கள் செய்யது அலி,
ஹாஜாமைதீன், பீர் மைதீன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்துல் பாசித், தொண்டரணி செயலாளர் புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் காஞ்சி இப்ரஹிம், இம்ரான், பைசல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் ,புளியங்குடி சங்கரன்கோவில், அச்சன்புதூர், வடகரை, பொட்டல்புதூர் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள 33 கிளைகளின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உள்ள
இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 3.5 % இடஒதுக்கீட்டை 7 % ஆக உயர்த்த வேண்டும். கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரி அருகில் மாவட்ட சட்டக் கல்லூரி , வேளாண் கல்லூரி மற்றும் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
பல மாதங்களாக மந்த நிலையில் நடைபெறும் தென்காசி- திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
கடையநல்லூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், அரசு கருவூலம் மற்றும் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டை கிளை நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அலியார், இஸ்மாயில் கரீம் சாகுல்ஹமீது மற்றும் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
