BREAKING NEWS

சினிமா

தமிழ் ராக்கர்ஸில் லீக் ஆனது ‘ஆர்ஆர்ஆர்’!

தமிழ் ராக்கர்ஸில் லீக் ஆனது ‘ஆர்ஆர்ஆர்’!

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட ஆர்ஆர்ஆர் படம் இணையத்தில் லீக் ஆனது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கியுள்ள படம், ’ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகர் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒளிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆலியா பட், ராம் சரணின் காதலியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 550 தியேட்டர்களில் இந்தப் படம் இன்று வெளியாகி இருக்கிறது. உலகம் அளவில் பலத்த வரவேற்பையும் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலர் இந்தப் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல, அனைத்துப் படங்களையும் திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்தப் படத்தையும் வெளியிட்டுள்ளது. பிலிமிவாப், மூவிரூல்ஸ் உட்பட மேலும் சில தளங்களிலும் இந்தப் படம் திருட்டுத்தனமாக வெளியாகி இருக்கிறது.

இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள், இணையத்தில் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்றும் திரையரங்குகளில் படத்தைப் பார்க்குமாறும் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )