சினிமா
இளம் பெண்ணைத் தாக்கியதாக பிரபல ஹாலிவுட் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் எஜ்ரா மில்லர் (Ezra Miller). சிட்டி ஐலேண்ட், அனதர் ஹேப்பி டே, மேடம் போவரி, ஜஸ்டிஸ் லீம், ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ’தி பிளாஷ்’ என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இவர், ஹவாய் தீவில் ஹிலோ என்ற பகுதியில் கடந்த மாதம் மதுபான கூடம் ஒன்றுக்குச் சென்றார். அங்கு 23 வயது பெண் கரோக்கி பாடிக்கொண்டிருந்தபோது, அவரிடம் இருந்து மைக்கைப் பறித்து தகராறில் ஈடுபட்டார். பின் இன்னொரு இளைஞர் மீதும் பாய்ந்துள்ளார். இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
CATEGORIES Uncategorized
