BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஈரோடு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து  புஷ்பா வைதேகி ஆகிய இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை மாற்றக்கோரி அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் எண்ணமங்கலம் ஊராட்சியில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணித்தள பொறுப்பாளர்களான புஷ்பா வைதேகி ஆகிய இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை மாற்றக்கோரி ஒரு தரப்பினரும் மாற்றக்கூடாது என ஒரு தரப்பினரும் எண்ணமங்கலம் ஊராட்சி அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு பொதுமக்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் சிவசங்கர் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி. ஸ்ரீராம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )