BREAKING NEWS

விஜய் படத்தின் தலைப்பை பயன்படுத்துவதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு

விஜய் படத்தின் தலைப்பை பயன்படுத்துவதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு.

Kushi Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos |  eTimes

விஜய் படத்தின் தலைப்பை பயன்படுத்துவதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விஜய், ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’குஷி’. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இந்தப் படம் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியானது. இதே படத்தை, இதே தலைப்பில் கடந்த 2001-ம் ஆண்டு தெலுங்கில் இயக்கினார், எஸ்.ஜே.சூர்யா. விஜய் கேரக்டரில் பவன் கல்யாண், ஜோதிகா கேரக்டரில் பூமிகா நடித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த ’குஷி’ தலைப்பை விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கு வைத்துள்ளனர். இந்தப் படத்தை ஷிவா நிர்வாணா இயக்குகிறார். சமந்தா நாயகியாக நடிக்கிறார். ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி உட்பட பலர் நடிக்கின்றனர்.

குஷி - விஜய் தேவரகொண்டா, சமந்தா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பவன் கல்யாண் ரசிகர்களும் விஜய் தேவர கொண்டா ரசிகர்களும் இந்த தலைப்பை பயன்படுத்துவது தொடர்பாக சமூக வலைதளங்களில் காரசாரமான மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இது பவன் கல்யாணின் கிளாசிக் பட டைட்டில் என்றும் அதைப் பயன்படுத்துவது தவறு என்று பவன் கல்யாண் ரசிகர்களும் இதில் தவறு என்ன இருக்கிறது என்று விஜய் தேவரகொண்டா ரசிகர்களும் மோதி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )