BREAKING NEWS

சமந்தாவின் `குஷி’: முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு.

சமந்தாவின் `குஷி’: முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு.

சமந்தாவின் `குஷி’: முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு

சமந்தா நடிக்கும் `குஷி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் படம், ’குஷி’. படத்தை தெலுங்கு இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி முரளி ஒளிப்பதிவு செய்கிறார். ஹிஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் டிசம்பர் 23-ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தது. இந்நிலையில் முதல் ஷெட்யூல் நிறைவடைந்து விட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )