BREAKING NEWS

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினம் தஞ்சாவூர் யாப்பா நகர் பிஷப் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

 

இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆயத்தமின்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசிய மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கி நீலவானம் தூய காற்று குறித்தும்,

 

 

மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் குறித்தும், தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்த வரும் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் குறித்தும், திருமலைசமுத்திரத்தில் உருவாகி வரும் விருட்ச வனம் குறித்தும் எடுத்துக் கூறினார்.

 

தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதி மொழியினை மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

 

 

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற் பொறியாளர் திருமதி. விஜயப்பிரியா, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், இணைச் செயலாளர் பொறியாளர் முத்துக்குமார்,

 

பிஷப் பள்ளி தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் செபாஸ்டின், முதல்வர் சகோதரி பிரமிளா, கவின் மீது தஞ்சை இயக்க உறுப்பினர்கள் திருமதி. செல்வராணி, கவிஞர் ராமதாஸ், தன்னார்வலர்கள் இளவரசன், பிரபாகர், ரவிக்குமார், குரு பிரசாத், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி அலுவலர் திரு. மோகன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )