BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

ஆனால் இந்த தார் சாலைகள் கடந்த பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டுள்ள தார் சாலைகள் ஆகும். மேலும் தார் சாலைகள் பராமரிப்பின் போது இரண்டு கனரக வாகனங்கள் விலகிச் செல்லுமாறு சாலையை அகலப்படுத்த வேண்டும் என, மடத்துக்குளம் கிராமப்பகுதியில் உள்ள பல்வேறு தரப்பினரும், பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறுகலான தார் சாலையின் காரணமாக விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எனவே இனிவரும் நாட்களில் தார்சாலை அமைக்கும் நடைமுறைகளில், மாற்றம் செய்து, கிராம பகுதியில் தார் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )