BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் தீராத வயிற்றுவலி காரணமாக இளம் பெண் எலிபேஸ்டை (விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சையில் தீராத வயிற்றுவலி காரணமாக இளம் பெண் எலிபேஸ்டை (விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை மெடிக்கல் காலேஜ் ரோடு எம்ஜிஆர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி செல்வம். இவர்களின் மகள் டெய்ஸி (25). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 27ம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்து எலி பேஸ்டை (விஷம்) தின்றுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை உடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி டெய்ஸி இறந்தார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசில் செல்வம் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )