தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு
அரியலூர் தர மற்ற சாலைகள் போடுவதாக நகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு.
அரியலூர் நகர மன்ற உறுப்பினர் கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பகுதி சார்ந்த பிரச்சனைகளை எடுத்து கூறினர் .
அப்போது பேசிய திமுக நகராட்சி உறுப்பினர் புகழேந்தி பேசுகையில் தற்போது அரியலூர் நகரில் 18 வார்டுகளில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு அமைக்கப்படும் சாலைகள் தலைமைச் செயலாளர் கூறியவாறு இல்லாமல் சாலைகள் மீது சாலைகள் போடப்படுகின்றன.
பழைய சாலைகளை பெயர்த்துவிட்டு தான் புதிய சாலைகள் போட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டி கூறினார்.
நகராட்சி உறுப்பினரே குற்றச்சாட்டு கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது
CATEGORIES அரியலூர்