BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் !

திருச்சி என் ஐ டி நிறுவனம் மாணவர்களுக்கு இலவசமாக ஐஐடி படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது அதன்படி தூத்துக்குடியில் இருந்து 22 மாணவர்கள் விமானத்தில் சென்னை சென்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி, என் ஐ டி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் படிப்பதற்காக ஜெ.இ.இ பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது இந்தப் பயிற்சிகள் சென்னையில் இரு நாட்கள் நடைபெறும்.

அதற்காக தூத்துக்குடியில் இருந்து 13 மாணவிகள் உட்பட 23 பேர் சென்னை சென்று உள்ளனர் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் இவர்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாணவிகள் கூறுகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் எங்கள் கனவை நிறைவேற்றிய தாகவும் எங்களுக்கு விமானத்தில் செல்ல மிகவும் ஆசை இருப்பினும் இதுவரை செல்ல முடியவில்லை தற்போது எங்கள் ஆசை நிறைவேறியது எனவும் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )