வேலூர் மாவட்டத்தில் காங்., கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன என்பது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்பிகளுக்கு போலி பண மாலை அணிவித்த வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் வாஹித் பாஷா!

வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலையில் உள்ள டோல்கேட் பங்க்ஷன் பேலஸில் மாவட்ட காங்., ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் மாவட்டத்தலைவர்கள் மற்றும் வாஹித் பாஷா, சுரேஷ் , நரேஷ் ஆகியோரது தலைமையில் நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன என்பது குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் அழைப்பாளர்களாக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இக்கூட்டத்தில் திரளான காங்., கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போலி பணமாலை அணிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவே இது போலி பணமாலை என கூறியது நகைப்பை ஏற்படுத்தியது .
இக்கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதா மற்றும் சசிகாந்த் செந்தில் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கனிம வளம், சுரங்கப்பாதை அனைத்தையும் மாநில உரிமைகளை கபளீகரம் செய்யப் போகிறார்கள். இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொன்னோம். தொகுதி மறுவரையரை என்பது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு என பாஜக சொல்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய மாதிரி தொகுதி மறுவரையறையை செய்து கொள்வார்கள். அப்படி செய்தால் ஆணையம் தான் முடிவு செய்யும். அதனை சட்டம் மூலமும் செய்ய முடியாது. இதனை இதற்காகவே 50 ஆண்டுகளாக பிரதமர்கள் தள்ளி வைத்தார்கள். இது சாத்தியமில்லை என்பதால் தள்ளி வைத்தார்கள். ஆகவே இது தொடர்பாக எல்லா மாநிலங்களிடமும் பேச வேண்டும். ஒப்புதல் வாங்க வேண்டும். ஆனால் இவ்வளவு பெரிய திட்டத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது முடியாது. இது மக்களை ஏமாற்றுவதை போல் இப்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 லிருந்து 48 ஆக உயரும் என்பதை போல் இது அப்பட்டமாக மடைமாற்றும் நிகழ்வு. இதற்கு தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் ஒன்றுபட்ட கருத்து நன்றாக இருக்கிறது. அதனால் தான் 50 ஆண்டுகளாக அதனை ஒத்தி வைத்தோம். மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிகை 543 தான். அதனை மாற்ற தேவையில்லை. மாற்றினால் தமிழகம் அடிவாங்கும். மகளிர்களுக்கு 50 சதவிகிதம் தர வேண்டும் இட ஒதுக்கீடு என்றால் அதனை இன்றைக்கே கொடுங்கள். மக்கள் தேர்தலில் கூட தெளிவாக வாக்களிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். பிஜேபியை முழு சக்தியுடன் எதிர்ப்போம். மேகதாது விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தலைவர் ராகுல் காந்தியும் தெளிவாக இருக்கிறார். மாநில உரிமை தான் எங்களுக்கு முக்கியம். காவிரி என்பது அடிப்படை உரிமை. டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை சார்ந்துள்ளது. மேகதாது அணை கட்ட கூடாது என்பது தமிழக காங்கிரசின் அடிப்படை கொள்கை என கூறினார்.மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளர் சி.கே.தேவேந்திரன், மாநில செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ண குமார், மாவட்ட துணை தலைவர் பி.பி. சந்திரபிரகாஷ், தீனா, கப்பல் மணி, கஸ்பா கணேஷ், ஐ என் டி யூ சி மாநில செயலாளர் பி. பி. ஜெயபிரகாஷ், V.K. ரவி, மண்டல காங்கிரஸ் தலைவர்கள் ஐ. பி.ரகு, வி. கே. மனோகரன், ஜான் பீட்டர், காட்பாடி ஒன்றிய தலைவர்கள் ஜார்ஜ் (எ) இளங்கோவன், G.K..கண்சிஸ்டென்ஸ் திருவலம் கணேஷ், மகளிர் அணி காஞ்சனா உள்ளிட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
