BREAKING NEWS

வேலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை! 

வேலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை! 

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அண்ணா சாலையில் அமைந்துள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் மைதிலி தலைமையிலான போலீஸ் குழுவினர், திடீரென மாலை வேளையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது பி.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள அறைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் ஆய்வு செய்தனர்.

மேலும், அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை செய்தனர். இந்த திடீர் சோதனையால் பி.டி.ஓ. ,அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு சிலர் திருதிருவென விழித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சோதனை முடிவில் பல்வேறு ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்க பணம் மற்றும் பல ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையின் போது பிடிஓக்கள் திருமால், சத்தியமூர்த்தி மற்றும் அலுவலக ஊழியர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பிடி அலுவலகத்தில் நடைபெற்ற திடீர் சோதனை வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS