காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியாரின் 121-வது பிறந்தநாள் விழா:

அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!
வேலூர், ஆக. 26-
தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் தொண்டாற்றிய ஆன்மிகச் சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா, வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, புகழ்பெற்ற காங்கேயநல்லூரில் அமைந்துள்ள அவரது ஞானத் திருவளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. ஞான திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள் விழாவை முதன்முதலில் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியார் சுவாமிகளின் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாரியார் சுவாமிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கழக மாநில அமைப்புச் செயலாளர் வி.ராமு, அதிமுக 14-வது வட்டச் செயலாளரும், 10-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கே.பி.ரமேஷ், அதிமுக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
